விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக விஜய் ரசிகர்கள் அனைவரும் டுவிட்டரில் களமிறங்கியுள்ளனர்.
மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றன. பல்வேறு மாநிலங்களில் உள்ள லட்சக்கணக்கான விவசாயிகள் அங்கு ஒன்று திரண்டு இரவு பகல் பாராமல் போராடி வருகிறார்கள். அவர்களின் போராட்டத்தை கலைக்க போலீசார் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் எந்த ஒரு பலனும் இல்லை.
அதுமட்டுமன்றி மத்திய அரசு விவசாயிகளுடன் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது. இருந்தாலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெறும் வரையில் எங்கள் போராட்டம் தொடரும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்து 1200 டிராக்டர்களில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் டெல்லியை நோக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக விஜய் ரசிகர்கள் டுவிட்டரில் களமிறங்கியுள்ளனர். அதில், மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து தலைநகர் டெல்லியில் கடந்த இரண்டு வாரங்களுக்கு மேல் விவசாயிகள் போராடி வருகின்றனர். இந்நிலையில் விஜய் ரசிகர்கள் #VIJAYFansSupportFarmers என்னும் ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டிங் செய்து, விவசாயிகளுக்கு ஆதரவான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.