Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளுக்கு ஆதரவு… பதவியை ராஜினாமா செய்த டிஐஜி… நெகிழ்ச்சி…!!!

விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து பஞ்சாப் சிறைத்துறை டிஐஜி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றன. பல்வேறு மாநிலங்களில் உள்ள லட்சக்கணக்கான விவசாயிகள் அங்கு ஒன்று திரண்டு இரவு பகல் பாராமல் போராடி வருகிறார்கள். அவர்களின் போராட்டத்தை கலைக்க போலீசார் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் எந்த ஒரு பலனும் இல்லை.

அதுமட்டுமன்றி மத்திய அரசு விவசாயிகளுடன் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது. இருந்தாலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெறும் வரையில் எங்கள் போராட்டம் தொடரும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்து 1200 டிராக்டர்களில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் டெல்லியை நோக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து பஞ்சாப் சிறைத்துறை டிஐஜி லக்மிந்தர் சிங் ஐகார் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது பற்றி உள்துறை அமைச்சகத்துக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், “விவசாய குடும்பத்தில் பிறந்த நான், வேளாண் சட்டத்திற்கு எதிராக போராடும் விவசாய சகோதரர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். எனவே எனது பதவியை ராஜினாமா செய்கிறேன்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |