Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

விவசாயிகளுக்கு இதை கட்டாயப்படுத்தி வழங்கக் கூடாது….. அரசு திடீர் எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

விவசாயிகளுக்கு உரங்களுடன் இணைபொருட்களை கட்டாயப்படுத்தி வழங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.உரங்கள் அரசு விற்பனைக்கு நிர்ணயம் செய்த விலையில் தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் உரங்கள் கூடுதல் விலைக்கு விற்றால் உர கட்டுப்பாட்டு சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.மானிய விலையில் பி ஓ எஸ் இயந்திரங்கள் மூலமாக பயிர் சாகுபடிக்கு தேவையான உரங்களை விவசாயிகளின் ஆதார் எண்ணை பதிவு செய்து விற்பனை செய்ய வேண்டும்.

அதேசமயம் உரங்களின் இருப்பு மற்றும் விலை விவரங்கள் அனைத்தையும் தகவல் பலகையில் எழுத வேண்டும். விவசாயிகள் அனைவரும் உரம் வாங்கும் போது உரிய ரசீது பெற வேண்டும்.உரங்களுடன் நோ நோ யூரியா போன்ற இணைப்பொருட்களை விவசாயிகளுக்கு கட்டாயப்படுத்தி வழங்கக் கூடாது. உரிய ஆவணம் என்று உர விற்பனையில் ஈடுபடக் கூடாது.இதனைத் தவறும் பட்சத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |