நாமக்கல் மாவட்டம் அத்தனூர் வனவியல் விரிவாக்கம் மையம் சார்பில் செய்தி குறிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது, நாமக்கல் வனக்கோட்டம் அத்தனூர் வனவியல் விரிவாக்க மையத்தில் பசுமை தமிழ்நாடு இயக்கம் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு தேக்கு, வேம்பு, செம்மரம் நாற்றுகள் தோட்டங்களில் நடவு செய்ய இலவசமாக வழங்கப்பட இருக்கிறது. மேலும் அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் தொழிற்சாலைகளுக்கு வேம்பு, மஞ்சள், கொன்றை, நாவல், இலுப்பை, நீர் மருது, அத்தி, பலா, சொர்க்கம், பாதாம், மகிழம், நெல்லி நாற்றுகள் இலவசமாக வழங்கப்படுகிறது. இதனை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளலாம் என அதில் கூறப்பட்டிருக்கிறது.
Categories