சென்னை விவசாயிகளுக்கு தேவைப்படும் உரங்களை தடையில்லாமல் வழங்குமாறு கூட்டுறவு சங்கங்களுக்கு கூட்டுறவுத் துறை உத்தரவிட்டுள்ளது. தமிழக கூட்டுறவு விற்பனை இணையமானது வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கங்கள், தொடக்க வேளாண், கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாக விவசாயிகளுக்கு உரங்கள் போன்ற வேளாண் பொருட்கள் விற்பனை செய்து வருகிறது.
அவற்றின் விலை வெளிச்சந்தைகளை விட குறைவாக உள்ளது. தற்போது பருவமழை துவங்கியுள்ளதால், விவசாயிகள் பயிர் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் உரங்களை கட்டுப்பாடுகளை ஏற்படுத்தி அவற்றை அதிக விலைக்கு விற்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளது. அவற்றின் உறுப்பினர்களாக உள்ள விவசாயிகள் உரங்களை வாங்கச் செல்லும்போது தட்டுப்பாட்டை காரணமாக காட்டி திருப்பி அனுப்புவதாக தெரியவருகிறது.
இதுபற்றி, கூட்டுறவு துறைக்கு புகார்கள் சென்றுள்ளது. அதனால் விவசாயிகளை அலைய விடாமல் அனைத்து வகையான உரங்களையும் தங்கு தடையின்றி வழங்குமாறு கூட்டுறவு சங்கங்களுக்கு கூட்டுறவுத் துறை உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து சங்கங்களில் தீவிர ஆய்வுகளை நடத்தி, உரவிணியோகத்தில் தனி கவனம் செலுத்தி உரிய நேரத்தில் உரங்கள் கிடைப்பதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.