பிரதமர் கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் விவசாயிகளின் வங்கி கணக்குக்கு நேரடியாக ஒவ்வொரு வருடமும் 6,000 ரூபாய் செலுத்தப்பட்டு வருகிறது. ஆண்டுக்கு 3 தவணைகளாக ஒரு தவணைக்கு 2000 ரூபாய் என்ற கணக்கில் மொத்தம் 6000 ரூபாய் செலுத்தப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் விவசாயிகளால் ஒவ்வொரு ஆண்டும் 36000 ரூபாய் பெற முடியும். அந்த திட்டம் தான் பிரதமர் கிசான் மந்தன் யோஜனா திட்டம்.
இந்தத் திட்டத்தின் கீழ் 60 வயதைத் தாண்டிய விவசாயிகளுக்கு ஒவ்வொரு மாதமும் 3000 ரூபாய் வழங்கப்படும். மாதம் 3000 ரூபாய் வீதம் ஆண்டுக்கு 30 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். இந்த பென்ஷன் திட்டத்தின் கீழ் பயனடைய 18 வயது முதல் 40 வயதிற்குட்பட்ட விவசாயிகள் இந்த திட்டத்தில் பங்கேற்று முதலீடு செய்யலாம். வயதுக்கு ஏற்ப முதலீடு தொகை மாறுபடும். 2 ஹெக்டேருக்குள் நிலம் வைத்திருக்க வேண்டும். 18 வயதில் இந்த திட்டத்தில் இணையும் விவசாயிகள் ஒவ்வொரு மாதமும் 55 ரூபாய் முதலீடு செய்தால் போதும். முப்பது வயதை கடந்த விவசாயியாக இருந்தால் மாதம் 150 ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். 40 வயதுக்கு மேல் உள்ள விவசாயிகள் மாதம் 200 ரூபாய் முதலீடு செய்தால் இந்த திட்டத்தில் பயன் பெறலாம்.