விவசாயிகளின் கடன் தள்ளுபடி விவகாரத்தில் வரம்பை நிர்ணயிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது
கடன் தள்ளுபடி செய்யும் போது அது யாருக்கு செய்ய வேண்டும் என்பதை வரையறுக்க அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சிறு, குறு விவசாயிகள் என வரையறுத்து 5 ஏக்கர் வரையிலான கடன் தள்ளுபடி செய்தது சரிதான் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அனைத்து விவசாயிகளுக்கும் கடன் தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. தமிழக அரசு அனைத்து விவசாயிகளுக்கும் கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற மனு மீது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது..