Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளுக்கு கிரெடிட் கார்டு…. வாங்குவது எப்படி….? முழு விபரம் இதோ….!!

மத்திய அரசு விவசாயிகள் பயன்பெறும் வகையில் கிசான் கிரெடிட் கார்டை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த கிசான் கிரெடிட் கார்டின் மூலம் விவசாயிகள் எப்போது வேண்டுமானாலும் குறைந்த வட்டியில் கடன் பெற்றுக் கொள்ளலாம். ஸ்டேட் பேங்க் போன்ற முன்னணி வங்கிகளில் கிசான் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி கொள்ளலாம். 3 லட்சம் வரை கடனுக்கு 2 சதவிகித வட்டி சலுகை இந்த கார்டின் மூலம் கிடைக்கப்பெறும். அதோடு கடனை உடனே திரும்பச் செலுத்தினால் மூன்று சதவிகிதம் வரை வட்டி சலுகை கிடைக்கும். இவ்வளவு சிறப்பம்சங்கள் கொண்ட இந்த கார்டை பெறுவது எப்படி என்பது குறித்த முழு விபரங்களை காணலாம். அதற்கு முதலில் உங்களது செல்போனில் SBI YONO ஆப் டவுன்லோடு செய்து லாகின் செய்ய வேண்டும்.உள்ளே சென்றதும் Yono Krishi க்குள் சென்று khata என்பதை கிளிக் செய்யவும். அடுத்ததாக KCC review பிரிவில் சென்று அப்ளை கொடுக்க வேண்டும்.அல்லது
வங்கிக் கிளைக்கு நேரடியாகச் சென்றும் விண்ணப்பிக்கலாம். வங்கியில் விண்ணப்பம் வாங்கி அதனுடன் சில குறிப்பிட்ட ஆவணங்களை சேர்த்து சமர்ப்பிக்க வேண்டும்

Categories

Tech |