இன்று (ஏப்ரல் 4) முதல் மே 19ஆம் தேதி வரை சாத்தனூர் அணையில் தண்ணீர் திறந்து விடுமாறு தமிழக அரசு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சாத்தனூர் அணையில் அடுத்த 45 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடுமாறு தமிழக அரசு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதன்படி இன்று (ஏப்ரல் 4) முதல் மே 19ஆம் தேதி வரை 166.40 மி.க.அடி தண்ணீரானது திறந்து விடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது, திருவண்ணாமலை மாவட்டம், சாத்தனூர் அணையிலிருந்து 2021-22 ஆம் ஆண்டிற்கு, சாத்தனூர் அணையின் இடது மற்றும் வலது புற கால்வாய்களின் ஏரிகளுக்கு நாளொன்றுக்கு முறையே 140 க.அடி/வினாடி மற்றும் 160 கனஅடி/ வினாடி வீதத்திற்கு, மொத்தமாக 300 கனஅடி/ வினாடி தண்ணீரானது திறந்துவிடுமாறு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி இன்று முதல் மே 19ஆம் தேதி வரை தொடர்ச்சியாக, 45 நாட்களுக்கு 1166.40 மி.க அடி தண்ணீரானது திறந்து விடப்படும். இதையடுத்து திருக்கோவிலூர் பழைய ஆயக்கட்டு நிலங்களுக்கு ,வருகிற ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் 800 மி.க அடி நீரினை, நீர் பங்கீடு விதிகளின்படி மற்றும் விவசாயிகளின் கோரிக்கை படி, 3 தவணைகளில் அவர்களுக்கு தேவைப்படும் பொழுது, சாத்தனூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்படும் எனவும் அரசு ஆணையிட்டுள்ளது.
ஆகவே இதன் மூலம் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் போன்ற மாவட்டங்களில் உள்ள 12,543 ஏக்கர் நிலங்களானது பாசன வசதி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.