விவசாயிகளுக்கு 1.5% வட்டி மானியம் அளிக்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை அதிகரித்துள்ளதால் இந்த ஆண்டு வட்டிக்கு 1.5% மானியம் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த மானியம் மீனவர்கள் மற்றும் கால்நடை விவசாயிகள் ஆகியோருக்கு கிடைக்கும். இதனால் விவசாயிகளுக்கு குறைந்த வட்டியில் பணம் கிடைக்கும்.
மேலும் பட்டி மானியத்திற்கு 34,856 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள், ஸ்மால் பைனான்ஸ் வங்கிகள், மண்டல ஊரக வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் வாயிலாக பெறப்பட்ட 3 லட்சம் ரூபாய் வரையிலான விவசாயக் கடன்களுக்கு 1.5% வட்டி மானியம் கிடைக்கும்.மேலும், கிசான் கிரெடிட் கார்டு வாயிலாக விவசாயிகளுக்கு தொடர்ந்து 3% வட்டி மானியம் கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.