Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

விவசாயிகளுக்கு சமர்ப்பணம்…. ஆணிப்படுக்கையில் தீபத்தை ஏந்தியபடி நடந்த யோகா நிகழ்ச்சி…!!

விவசாயிகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கையில் தீபத்தை ஏந்தியபடி ஆணிப்படுக்கையில் யோகா நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.

விருதுநகர் மாவட்டத்திலுள்ள அருப்புக்கோட்டை பகுதியில் யோகா நிலையம் அமைந்துள்ளது. இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விவசாயிகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஆணி படுக்கையில் கையில் தீபத்தை ஏந்தியபடி யோகா செய்துள்ளனர். அந்த ஆணி படிக்கையில் யோகா ஆசிரியர் ராஜகோபாலன் நவபாரத ஆசனம், தனூராசனம், பஸ்சி மோத்தாசனம், சயன பத்மாசனம் உள்ளிட்ட பல்வேறு வகையான ஆசனங்களை செய்து காண்பித்துள்ளார். அதன்பிறகு மாணவருடன் இணைந்து கையில் தீபம் ஏந்தி விவசாயிகளுக்கு யோகாவை சமர்ப்பித்துள்ளார். மேலும் யோகா மாணவர்களும் பல்வேறு ஆசனங்களை செய்து அசத்தியுள்ளனர்.

Categories

Tech |