Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

விவசாயிகளுக்கு சூப்பர் வாய்ப்பு…. பருத்தி ஏலத்தில் பங்கேற்க கலெக்டர் வேண்டுகோள்….!!!!!!!!

தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி செய்தி குறிப்பு  ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்  கூறப்பட்டிருப்பதாவது, விவசாயிகள் விளைவிக்கும் பருத்தியை தரகு கமிஷன் இல்லாமல் நல்ல விலைக்கு விற்பனை செய்து பயனடைய அரூர்  ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடைபெறும் மறைமுக ஏலத்திற்கு கொண்டுவரமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த மறைமுக ஏலம் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை நடைபெறும். இந்த ஏலத்தில் தர்மபுரி மாவட்டம் மற்றும் கொங்கணாபுரம், ஊத்தங்கரை, செங்கம் பகுதி பருத்தி வியாபாரிகள் பருத்தி அறவை  மில் வியாபாரிகள் கலந்து கொள்கின்றார்கள்.

மேலும் விவசாயிகள் தங்கள் விளைவிக்கும் பருத்தியை நிழலில் நன்கு உலர்த்தியும் சருகு, தூசி இல்லாமல் வெண்மை நிறத்துடன் எடுத்து வந்து அதிக விளைக்கு  விற்பனை செய்து பயனடைந்து கொள்ளலாம். ஏலத்தில் கிடைக்கும் பருத்திக்கான தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. அதனால் பருத்தி கொண்டு வரும் போது தங்கள் ஆதார் கார்டு, வங்கி கணக்கு புத்தக நகல் போன்றவற்றை எடுத்து வர வேண்டும் என அதில் கூறப்பட்டிருக்கிறது.

Categories

Tech |