இந்தியாவில் விவசாயிகளின் நலனுக்காக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அவ்வகையில் பிஎம் கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஒவ்வொரு வருடம் 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படுகிறது. இதனைப் போலவே பல்வேறு திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன. அப்படி விவசாயிகளுக்கு மிகவும் பயனளிக்கும் மற்றொரு திட்டம் தான் டிராக்டர் மானிய திட்டம். பிஎம் கிசான் டிராக்டர் யோஜனா என்ற திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மானிய தொகை வழங்கப்படுகின்றது.
இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பாதி விலையில் டிராக்டர்கள் கிடைக்கின்றன. டிராக்டருக்கான மீதிய தொகையை மத்திய அரசு வழங்குகிறது. மத்திய அரசு மட்டுமல்லாமல் மாநில அரசுகளும் டிராக்டர் வாங்க மானிய உதவி வழங்குகின்றன. இந்த திட்டத்தில் 18 முதல் 60 வயது வரையில் இருக்கும் இந்திய குடிமகன்கள் விண்ணப்பிக்கலாம் .
குடும்ப ஆண்டு வருமானம் 1.5 லட்சத்திற்கு குறைவாக இருக்க வேண்டும். மேலும் டிராக்டர் வாங்குபவரின் பெயரில் சொந்தமாக விவசாய நிலம் இருக்க வேண்டும். வேறு மானியத் திட்டத்தில் உதவி பெற்றவராக இருக்கக் கூடாது. முக்கிய நிபந்தனை என்னவென்றால் விண்ணப்பத்தாளர் கடந்த ஏழு வருடங்களில் இதனைப் போல டிராக்டர் எதையும் வாங்கி இருக்கக் கூடாது. இந்தத் திட்டம் விவசாயிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.