Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

விவசாயிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்… இதற்கு மானியம் வழங்கப்படும்… அதிகாரிகள் அறிவிப்பு…!!!!!

வேலூர் மாவட்டத்தில் விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் வேளாண்மை துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டு கொண்டிருக்கிறது. இதற்காக மானியம் கடனுதவி மற்றும் விதைகள் போன்றவை வழங்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தரிசு நிலங்களை விவசாய நிலங்களாக மாற்ற மானியம் வழங்கப்படுகிறது. இது பற்றி வேளாண் அதிகாரிகள் பேசிய போது வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம பஞ்சாயத்துகளில் ஐந்து வருடங்களுக்கு மேல் விவசாயம் செய்யாமல் விடப்பட்ட நிலங்கள் தரிசு நிலங்களாக இருக்கிறது. அந்த நிலங்களை மீண்டும் மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.

அதன்படி தரிசு நிலங்களில் வளர்ந்து இருக்கின்ற செடி மற்றும் கொடிகளை அகற்றவும் விவசாய நிலமாக மாற்றுவதற்கும் மானியம் வழங்கப்படுகிறது. மேலும் பயிர் வகை பயிர்கள் சிறுதானியம் விதைக்கவும் மானியம் வழங்கப்படுகிறது. வேலூர் வட்டாரத்தில் பெருமுகை, சிறுக்காஞ்சி, அன்பூண்டி, கருகம்புதூர் போன்ற பஞ்சாயத்துகளில் இருந்தும் இந்திய திட்டத்திற்கு முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. இதே போல ஒவ்வொரு ஒன்றியத்திற்கும் சில பஞ்சாயத்துகளுக்கும் முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. அதனால் தரிசு நிலங்கள் வைத்திருக்கும் விவசாயிகள் தங்கள் நிலங்களை மீண்டும் விவசாய நிலமாக மாற்ற விரும்பினால் அருகில் உள்ள வேளாண் அலுவலர் அணுகலாம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |