நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு மத்திய அரசு பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் மிக முக்கியமான ஒன்றுதான் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டம். இந்தத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வருடத்திற்கு 6000 ரூபாய் நிதி உதவி மூன்று தவணைகளாக ஒரு தவணைக்கு 2000 ரூபாய் என வழங்கப்பட்டு வருகிறது.இந்தத் திட்டத்தில் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மட்டுமே 2000 ரூபாய் கிடைப்பதால் இதைவிட பெரிய தொகையை விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். அதனால் இந்த தொகை உயர்த்தப்பட வேண்டும் என கோரிக்கை இழந்துள்ளது.
இந்நிலையில் விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில் மற்றொரு பென்ஷன் திட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது.அதாவது விவசாயிகளுக்காக உருவாக்கப்பட்ட திட்டம் தான் பிரதான் மந்திரி கிசான் மாந்தன் யோஜனா. இந்தத் திட்டத்தில் 18 வயது முதல் 40 வயது வரையில் உள்ள விவசாயிகள் இணைந்து பயன்பெற முடியும். 60 வயது முடிந்த பிறகு பென்ஷன் வந்து சேரும்.18 வயதாக இருக்கும் போதே இந்த திட்டத்தில் இணைந்தால் ஒவ்வொரு மாதமும் 55 ரூபாய் பிரிமியம் செலுத்த வேண்டும்.
Maadhan.in என்ற இணையதளத்தில் சென்று இந்த திட்டத்தில் விவசாயிகள் விண்ணப்பிக்கலாம். இதற்கு ஆதார் கார்டு,வங்கி கணக்கு புத்தகம் மற்றும் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் ஆகியவை தேவைப்படும்.குறிப்பாக இந்த திட்டத்தில் இணைவோருக்கு ஒவ்வொரு மாதமும் 3000 ரூபாய் பென்சில் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.