விருதுநகர் மாவட்டத்தில் 150 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் தமிழக அரசின் வட்டி இல்லா பயிர் கடன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாக விவசாயிகளுக்கு தற்போது வரை 32.50 கோடிக்கு பயிர் கடன் வழங்கப்பட்டுள்ள நிலையில் இந்த வாய்ப்பை பயன்படுத்தி வட்டி இல்லா பயிர் கடன் பெற்று பயனடைய விவசாயிகளுக்கு தற்போது அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கடன் பெற விரும்பும் விவசாயிகள் பயிர் கடன் பெறுவதற்கு கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் பயிர் அடங்கல், சிட்டா,ஆதார் அட்டை நகல் மட்டும் குடும்ப அட்டை நகல் மற்றும் புகைப்படம் ஆகியவற்றுடன் அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நேரில் விண்ணப்பித்து பயிர் கடன் பெறலாம் என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அதேசமயம் அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் நூறு ரூபாய் செலுத்தி புதிய உறுப்பினர்களாக சேர்ந்து பயிர் கடன் பெறலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வட்டி இல்லா பயிர் கடனை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.