Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளுக்கு செம குட் நியூஸ்…. இனி உங்களின் குழப்பம் தீர்ந்து விடும்…. பிரதமர் மோடி சூப்பர் அறிவிப்பு….!!!

டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இரண்டு நாள் வேளாண் மாநாட்டையும், கண்காட்சியும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அதன் பிறகு 600 விவசாய இடுபொருள் மையங்களையும் தொடங்கி வைத்தார். அதனைப் போல பி.எம். பாரதிய ஜன்‌ உர்வர்க் ப்ரியோஜனா ‘ஒரே நாடு ஒரே உரம்’ எனும் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். நாடு முழுவதும் மேற்படி உரங்களை தயாரிக்கும் நிறுவனங்கள் பாரத் என்ற ஒரே வர்த்தக முத்திரையில் உரங்களை தயாரிக்க வேண்டும் என்பதை இந்த திட்டத்தின் நோக்கம் ஆகும். இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, தற்போது நாட்டில் விற்கப்படும் யூரியா, ஒரே பெயர், ஒரே தரம் மற்றும் ஒரே வர்த்தக முத்திரையுடன் இருக்கும். அதன் பெயர் பாரத் ஆகும். எனில் நாடு முழுவதும் பாரத் வர்த்தக முத்திரையில் தான் யூரியா கிடைக்கும். இதன் மூலம் உரங்களின் விலை குறைவதுடன் அவற்றின் தரம் அதிகரிக்கும்.

அது மட்டுமில்லாமல் உரங்களின் தரம் மற்றும் இருப்பு குறித்த விவசாயிகளின் அனைத்து விதமான குழப்பங்களும் தீர்ந்துவிடும். இந்த திட்டத்தின் கீழ் யூரியா, டி.ஏ.பி., பொட்டாஷ், என்.பி.கே. என அனைத்து விதமான உரங்களும் ஒரே வர்த்தக முத்திரையுடன் விற்கப்படும். அதனை தொடர்ந்து விவசாயத்தில் தொழில்நுட்பம் சார்ந்த நவீன உத்திகளை கடைபிடிக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளது. எனவே விவசாயத்தில் புதிய முறைகளை உருவாக்க வேண்டும். திறந்த மனதுடன் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முறைகளை பின்பற்ற வேண்டும். இந்த சிந்தனையுடன் விவசாயத்தில் அறிவியல் முறைகளை மேம்படுத்துவதுடன், இயற்கை விவசாயத்தையும் ஊக்கப்படுத்த வேண்டும். மேலும் குஜராத் இமாச்சலப் பிரதேசம், ஆந்திர பிரதேசம், உத்தர பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் இயற்கை விவசாயத்திற்காக விவசாயிகள் அதிக அளவில் உழைத்து வருகின்றனர். குஜராத்தில் மாவட்டம் மற்றும் கிராம பஞ்சாயத்து அளவிலும் இதற்கான திட்டங்கள் தீட்டப்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |