உலக அளவில் பாஸ்பேட் மற்றும் பொட்டாஷ் உரங்களின் விலை இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து அதிகரித்து வருகிறது. சர்வதேச சந்தையில் டிஏபி உரம் கடந்த மே மாதம் ஒரு டன் ரூ.42,375 ஆக இருந்தது. ஆனால் கடந்த செப்டம்பர் மாதம் 54,570 ஆக உயர்ந்துள்ளது. இந்த விலை மேலும் உயர்ந்து வருகிறது. இதனால் பல மாநிலங்களில் பாஸ்பேட் மற்றும் பொட்டாசியம் உரங்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது.
இந்நிலையில் ஒன்றிய உரத்துறை அமைச்சர் மன்சூக் மண்டவியா உயர்மட்ட ஆலோசனை கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் பாஸ்பேட் மற்றும் பொட்டாஷ் ஓரங்களில் உள்நாட்டு உற்பத்தி தொடர்ந்து ஆதரவு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க கூடிய வகையில் தற்போதைய மானிய கொள்கையில் மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த உரங்களின் உற்பத்தியில் தற்சார்பு எட்ட முடியும் என்று ஒன்றிய அரசு கூறுகிறது. தற்போது ஊட்டச்சத்து அடிப்படையிலான உர மானியம் வழங்கப்பட்டு வருகிறது.