Categories
மாநில செய்திகள்

விவசாயிகளுக்கு செம ஹேப்பி நியூஸ்…. வட்டியில்லா கடனுதவி…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

விருதுநகர் மாவட்டத்திலுள்ள விவசாயிகளுக்கு அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் வட்டியில்லா பயிர்க்கடன் மற்றும் வட்டியில்லா கால்நடை பராமரிப்பு கடன், குறைந்த வட்டியில் சுய உதவி குழு கடன், மாற்றுத்திறனாளிகளுக்கான கடன், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் கடன் போன்ற அனைத்து கடன் உதவிகளும் வழங்கப்படுவதாக விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் தங்களின் ஆதார் கார்டு நகல், ரேஷன் கார்டு, நிலவுடமை தொடர்பான 10 கணினி சிட்டா, பாஸ்போர்ட் அளவு போட்டோ, பயிர் சாகுபடி தொடர்பான விவரங்கள் சான்றிதழ் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு தங்களின் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை தொடர்பு கொள்ளலாம்.

அங்கு சென்று  கடன் மனு சமர்ப்பித்து பயிர் கடன் மற்றும் இதர கடன்களை விவசாயிகள் பெற்றுக்கொள்ளலாம். அதனைப் போலவே தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர் மற்றும் உறுப்பினர் அல்லாத விவசாயிகள் தங்களுக்கு வேண்டிய அனைத்து உரங்களை சில்லறை விற்பனை மூலமாக பெற்றுக்கொள்ளமுடியும். இதுதொடர்பாக விவரங்கள் தேவைப்பட்டால் துணை பதிவாளர் மற்றும் முதன்மை வருவாய் அலுவலரை 9489927003, பொது மேலாளரை 9489927001 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். வட்டியில்லா கடன் வழங்கப்படும் என்று ஆட்சியர் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பை விவசாயிகள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |