Categories
மாநில செய்திகள்

“விவசாயிகளுக்கு ஜாக்பாட்!”…. ரூ.15,000 பெற உடனே அப்ளை பண்ணுங்க…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

விழுப்புரம் மாவட்டத்தில் பழங்குடியினர் மற்றும் ஆதிதிராவிடர் இனத்தை சேர்ந்த விவசாயிகள் விவசாய பைப்லைன் அமைக்க ரூ.15,000 மற்றும் புதிய மின் மோட்டார் வாங்க ரூ.10,000 மானியம் பெறுவதற்காக விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

மேலும் இந்த மானியத்தொகையை பெறுவதற்கு விவசாயிகள் http://tahdco.com/ என்ற தாட்கோ இணையதளத்தின் மூலம் விவசாய நிலத்திற்கான அடங்கல், சிட்டா புலப்பட நகலுடன் சேர்த்து விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் பெறப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் குழுவினரால் தேர்வு செய்யப்படும். அதன் பிறகு பழங்குடியினர் மற்றும் ஆதிதிராவிடர் இனத்தை சேர்ந்த விவசாயிகளுக்கு இதன் மூலம் மானிய தொகை வழங்கப்படும். எனவே விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Categories

Tech |