மகாராஷ்டிரா சட்டசபையில் அம்மாநில நிதி அமைச்சர் அஜித் பவார், 2022-2023 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்தார். அதில் இயற்கை எரிவாயு மீதான வாட் வரி குறைப்பை முன்மொழிந்த அவர், இயற்கை எரிவாயு மீதான வாட் வரி 13.5 சதவீதத்திலிருந்து 3 சதவீதமாக குறைக்கப்படும் என்று கூறியுள்ளார். மேலும் 2020ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட பயிர்க் கடனை முறையாக திருப்பிச் செலுத்தும் விவசாயிகளுக்கு தலா 20 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை திட்டம் வரும் ஆண்டு முதல் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
Categories