மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சு வார்த்தைகளை நடத்திய போதிலும் எந்த ஒரு பலனும் இல்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெறும் வரையில் எங்கள் போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர். பல்வேறு காரணங்களால் இதுவரை 470 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காலத்திலும் 6 மாத காலம் தொடர்ந்து போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் டுவிட் செய்துள்ளார். அதில், “வெளியே போக அஞ்சும் இக்காலத்தில் சாலைகளில் ஆறுமாத வாழ்க்கை”என்று விவசாயிகளின் போராட்டத்தை குறிப்பிட்டுள்ள அவர், சட்டங்களை திரும்பப் பெறும்வரை திரும்பப் போவதில்லை என்று கர்ஜிக்கும் அவர்களுக்கு துணை நிற்போம் என்று கூறியுள்ளார்.