மோடி அரசு வேளாண் சட்டங்கள் மூலமாக விவசாயிகளுக்கு துரோகம் செய்ததை தவிர வேறு எதுவும் செய்யவில்லை என்ற ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்கள் விவசாயிகளின் நலன்களுக்கு அதிக தீங்கு விளைவிக்கும் வகையில் இருப்பதாகவும் பெருநிறுவனங்களுக்கு பயனளிக்கக் கூடிய விதத்தில் இருப்பதாகவும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அனைத்தும் பல்வேறு குற்றச்சாட்டுகளை எழுப்பியுள்ளன.அது மட்டுமன்றி அந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் மத்திய அரசிற்கு எதிராக பல்வேறு போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கின்றன.மேலும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி வேளாண் சட்டங்கள் தொடர்பான விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக கடும் விமர்சனம் தெரிவித்துள்ளார்.
அவ்வகையில் வேளாண் சட்டங்கள் மூலமாக மோடி அரசு விவசாயிகள் அனைவருக்கும் துரோகம் செய்வதாக ராகுல்காந்தி தற்போது குற்றம் சாட்டியுள்ளார்.இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பஞ்சாப் மற்றும் அரியானா ஆகிய மாநிலங்களின் டிராக்டர் பேரணி மற்றும் பொதுக் கூட்டங்களில் கலந்துகொள்வது தொடர்பான வீடியோ உடன் ராகுல்காந்தி ட்விட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், “விவசாயிகள் அனைவரும் நம் நாட்டிற்கு உணவு பாதுகாப்பு அளித்தனர். அப்படிப்பட்டவர்களுக்கு மோடி அரசு துரோகம் செய்ததை தவிர வேறு எதையும் செய்யவில்லை”என்று அவர் கூறியுள்ளார்.