Categories
மாநில செய்திகள்

“விவசாயிகளுக்கு பரிசு திட்டம்” இவர்களும் விண்ணப்பிக்கலாம்…. அரசு புதிய அறிவிப்பு…!!!!

வேளாண் துறையில் சாதனை படைக்கும் விவசாயிகளுக்கு வேளாண் துறை வாயிலாக 2 லட்சம் ரூபாய் வரை பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விவசாயத்தில் புதிய தொழில்நுட்பங்கள், புதுமையான கருவிகள் கண்டுபிடிப்பு, இயற்கை வேளாண்மை, விளைபொருள் ஏற்றுமதி ஆகியவற்றில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு பரிசலிக்க தமிழக அரசு திட்டமிட்டு நடப்பாண்டு முதல் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த போட்டியில் பங்கேற்று வெற்றி பெறும் ஒவ்வொரு விவசாயிக்கும் ஒவ்வொரு பிரிவிலும் தலா 2 லட்சம் ரூபாய் பரிசளிக்கப்பட உள்ளது.

இந்த போட்டியில் பங்கேற்க விரும்பும் விவசாயிகள் தங்கள் செல்போனில் உழவன் செயலியை பதிவிறக்கம் செய்து அதில் தங்களுடைய பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும். பின்னர் தங்களுடைய பகுதி வேளாண் உதவி இயக்குனர்  100 ரூபாய் கட்டணம் செலுத்தி விண்ணப்பம் பெற்று பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் கட்டணம் செலுத்தியதற்கான ரசீதை இணைத்து படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

இந்நிலையில் இத்திட்டத்தின் கீழ் குத்தகை நிலத்தில் சாகுபடி செய்பவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குனர்களை தொடர்பு கொண்டு உரிய விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் நுழைவு கட்டணமாக ரூபாய் 100 செலுத்த வேண்டும்.

Categories

Tech |