Categories
மாநில செய்திகள்

விவசாயிகளுக்கு மகிழ்ச்சி செய்தி….! “இனி ஏரி, குளங்களில் இருந்து மண் எடுக்கலாம்”…. தமிழக அரசு அதிரடி….!!!!

தமிழகத்தின் ஏரி, குளங்களில் விவசாயிகள் இலவசமாக மண்களை எடுக்கலாம் என்று அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் ஏரி குளங்களில் படித்திருக்கும் வண்டல் மண்களை விவசாயத்திற்காக விவசாயிகள் இலவசமாக எடுத்து பயன்படுத்துவதற்கு தமிழக அரசு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியீட்டுள்ள செய்திக்குறிப்பில்: “ஏரி மற்றும் குளங்களில் படித்திருக்கும் வண்டல் மண்களை விவசாயிகள் பயன்படுத்தும் விதமாக மாவட்ட கலெக்டர் இடம் அனுமதி பெற்று அதனை எடுத்துக் கொள்ளலாம் என்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக அரசால் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் இலவசமாக வண்டல் மண் எடுத்து பயன்படுத்திக் கொள்ள சிறு கனிம சலுகை விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி நன்செய் நிலங்களின் மேம்பாட்டிற்காக ஹெக்டருக்கு 185 கன மீட்டர் வண்டல் மண்ணும், புன்செய் நிலங்களின் மேம்பாட்டிற்காக ஹெக்டருக்கு 222 கனம் மீட்டர் வண்டல் மண்ணும் எடுத்துக் கொள்ளலாம்.

இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை விவசாயிகள் சம்பந்தப்பட்ட கலெக்டரிடம் அனுமதி பெற்று இந்த மண்ணை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம.  20 நாட்களுக்கு மிகாமல் ஏரிப்புறங்களில் இருந்து நிர்ணயித்த அளவில் வண்டல் மண் எடுத்து விவசாய நிலங்களில் பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்படும்” என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Categories

Tech |