தமிழகத்தில் விவசாயிகளுக்கு மானிய விலையில் பெட்ரோல் ,டீசல் வழங்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையை சேர்ந்த ஐயா என்பவரின் மனு அடுத்த வாரம் விசாரணைக்கு வர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
அந்த மனுவில் பீகாரில் விவசாயிகளுக்கு 1 லிட்டர் பெட்ரோல் 50 ரூபாய் என மானிய விலையில் வழங்குவதாக மனுதாரர் ஐயா தகவல் தெரிவித்துள்ளார். ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு பெட்ரோல் டீசல் விலை உயர்வு கூடுதல் சுமையாக உள்ளது என்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.