Categories
விவசாயம்

விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு… ரூ.2000 எப்போது தெரியுமா… வெளியான தகவல்…!!!!!

பிஎம் கிசான் திட்டத்தில் 2000 ரூபாய் வழங்குவதற்கான தேதி குறித்த முக்கியமான தகவல் வெளியாகியிருக்கிறது. 

இந்தியாவில் உள்ள நலிந்த விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கவும் அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்த மத்திய அரசு தரப்பிலிருந்து பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஒவ்வொரு வருடமும் 6,000 ரூபாய் வழங்கப்படுகிறது. ஒரு தவணைக்கு 2000 ரூபாய் என மூன்று பகுதிகளாகப் பிரித்துத் தரப்படுகிறது.

இந்த பயணம் விவசாயிகளின் வங்கிக் கணக்கிலேயே நேரடியாக டெபாசிட்  செய்யப்படுகிறது.pm-kisan திட்டத்தின் கீழ் இதுவரை மொத்தம் 10 தவணைகள் வழங்கப்பட்டிருக்கின்றன. ஜனவரி 1 ஆம் தேதியில்தான் விவசாயிகளுக்கு பிரதமர் நரேந்திரமோடி கையால் பத்தாவது தவணைப் பணம் விடுவிக்கப்பட்டது. இந்த நிலையில் பத்தாவது தவணைப் பணம் எப்போது கிடைக்கும் என்று சுமார் 12 கோடி விவசாயிகள் காத்திருக்கின்றனர். பொதுவாக ஏப்ரல் ஜூலை மாதங்களில் pm-kisan தவணைப் பணம் வழங்கப்படுவது வழக்கம் ஆகும்.

இதற்கு முன் வெளியாகியிருந்தத தகவலின்படி ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் நிதியுதவி கிடைக்கும் என கூறப்பட்டிருந்தது. ஆனால் இதுவரை பணம் வரவில்லை. இந்த நிலையில் தற்போது இது குறித்து அப்டேட் வெளியாகியிருக்கிறது.அதாவது  ராமநவமி அல்லது அம்பேத்கர் பிறந்த நாளன்று விவசாயிகளுக்கு நிதி உதவி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனில் ஏப்ரல் 10-ஆம் தேதி அல்லது ஏப்ரல் 14ஆம் தேதி பணம் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை.

Categories

Tech |