Categories
மாநில செய்திகள்

விவசாயிகளுக்கு முழு விலையை வழங்கு…. டிடிவி தினகரன் வேண்டுகோள்…..!!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று திமுக 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியைப் பிடித்துள்ளது. அதன்பிறகு முதல்வராக பதவியேற்றுக் கொண்ட ஸ்டாலின், மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் தமிழக அரசில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. கொரோனா பேரிடர் காலத்தில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல்லை கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு வந்த பின்பு மழையால் நனைந்த நெல்லுக்கு எவ்வித பிடித்தமும் இன்றி முழு விலையையும் விவசாயிகளுக்கு வழங்கிட வேண்டும் என்று தமிழக அரசை டிடிவி தினகரன் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் நெல் கொள்முதல் செய்வதில் நிகழும் பல்வேறு குளறுபடிகளை தமிழக அரசு உடனடியாக சரி செய்ய வேண்டும் என்று வேண்டிக்கொண்டார்.

Categories

Tech |