Categories
மாநில செய்திகள்

விவசாயிகளுக்கு ரூ.2 கோடி வரை…. வட்டி மானியத்துடன் கடன் வசதி….. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு….!!!!

விவசாயிகளுக்கு வேளாண்மை உட்கட்டமைப்பு நிதி திட்டத்தின் கீழ் வட்டி மானியத்துடன் 2 கோடி வரை கடன் வசதி வழங்குவது குறித்து தமிழக வேளாண்மை குழு அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விவசாயிகள் உற்பத்தி செய்த வேளாண் விலை பொருட்களை மதிப்பு கூட்டு லாபகரமான விலைக்கு விற்பனை செய்யும் விதமாக அரசு மற்றும் தனியார் நிறுவங்களில் பல்வேறு கட்டமைப்புகளை தமிழக அரசு உருவாக்குவதற்காக தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

கிராம அளவில் உட்கட்டமைப்புகளை உருவாக்குவதற்காக முன்வரும் விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு வட்டி மானியத்தோடு கடன் வழங்கும் விதமாக மத்திய அரசின் வேளாண் உட்கட்டமைப்பு நிதி என்ற திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இதற்காக வங்கிகளில் இருந்து அதிகபட்சமாக 2 கோடி வரை கடன் பெறலாம்.இதற்கு ஏழு ஆண்டுகளுக்கு மூன்று சதவீத வட்டி மானியம் வழங்கப்படும். குறு மற்றும் சிறு நிறுவனங்களுக்கான கடன் உத்திரவாத நிதி அறக்கட்டளை திட்டத்தில் இருந்து 2 கோடி வரை கடனுக்கான உத்தரவாதம் வழங்கப்படுகிறது.

விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள், சுய உதவி குழுக்கள், கூட்டு பொறுப்புக் குழுக்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், விற்பனை கூட்டுறவு சங்கங்கள், புதிதாக தொழில் துவங்க முன்வரும் நிறுவனங்கள், வேளாண் தொழில் முனைவோர், வேளாண் விலை பொருட்கள் விற்பனை குழுமங்கள் உள்ளிட்ட பலரும் இந்த திட்டத்தின் கீழ் கடன் வசதி பெறலாம். மேலும் இது தொடர்பான கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ள https://agriinfra.dac.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Categories

Tech |