பிரதமர் கிசான் சம்ம நிதி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஒவ்வொரு வருடமும் 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. வருடத்திற்கு மூன்று தவணைகளாக தவணைக்கு 2000 ரூபாய் என மொத்தம் 6000 ரூபாய் கிசான் தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது. ஆனால் பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகள் 6000 ரூபாய் பெற வேண்டுமென்றால் ஆன்லைனில் ஈகேஒய்சி அப்டேட்டை முடித்திருக்க வேண்டும்.
இதனை முடிப்பதற்கான கடைசி தேதி ஜூலை 31 என மத்திய அரசு தெரிவித்துள்ளது. விவசாயிகள் வீட்டிற்கு அருகே உள்ள பொது சேவை மையங்கள் மற்றும் இ சேவை மையம் மூலமாக கேஒய்சி எளிதாக முடித்து விட முடியும். இதனைத் தவிர ஆன்லைன் மூலமாக எளிதில் இதனை செய்து முடித்து விடலாம்.
- ஆன்லைனில் eKYC முடிக்க https://pmkisan.gov.in/ இணையதளத்துக்கு செல்லவும்.
- அதில் உள்ள Farmers Corner பிரிவில் eKYC தேர்வு செய்யவும்.
- புதிதாக திறக்கும் பக்கத்தில் ஆஹ்டார் எண் பதிவிட்டு Search பட்டனை கிளிக் செய்யவும்.
- இப்போது மொபைல் எண் பதிவிட்டு OTP பெறவும்.
- OTP பதிவிட்டு Submit கொடுக்கவும்.
- இத்துடன் உங்கள் eKYC முடிந்துவிடும்.