விவசாயப்பிரிவில் இயங்கிவரும் முக்கிய நிறுவனமாக Way cool foods இருக்கிறது. விவசாயிகளுக்குப் பயன்படும் அடிப்படையில் Outgrow எனும் செயலி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இந்த நிறுவனத்தின் விவசாய ஆராய்ச்சி மையம் ஓசூரில் இயங்கி வருகிறது. அங்கு இந்த செயலியின் அறிமுகம் நடந்தது. சென்ற சில மாதங்களாக சோதனை அடிப்படையில் செயல்பட்டு வந்த இந்த ஆப் இப்போது முழுமையாக அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. இதுவரையிலும் 3000-க்கும் அதிகமான விவசாயிகள் சோதனையில்இதனைப் பயன்படுத்தி இருக்கின்றனர். அதன் வெற்றியை அடுத்து இப்போது அறிமுகம் செய்யப்பட்டு வருக்கிறது.
இந்நிலையில் விவசாயிகள் எதிர்கொள்ளும் நிகழ்நேரப் பிரச்சனைகளுக்கு தீர்வுகாணும் வகையில் “OUTGROW” ஆப் வடிவமைக்கப்பட்டுள்ளது. இருப்பிடம் சார்ந்த மண்டி, சந்தை விலைகள், வானிலை முன்னறிவிப்பு, பூச்சிகள் மற்றும் நோய்கள், மண் பரிசோதனை, வேளாண் நிபுணர் ஆலோசனை போன்றவற்றை விவசாயிகள் பெறும்படியான சிறப்பம்சங்களுடன் இந்த ஆப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள செயற்கை நுண்ணறிவு விவசாயிகளுக்கு நிச்சயம் உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.