Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

விவசாயிகளுக்கு விநியோகம் செய்ய…. “சூரத்திலிருந்து சிவகங்கைக்கு வந்தடைந்த 550 டன்கள் யூரியா”….!!!!!

சிவகங்கை மாவட்ட விவசாயிகளுக்கு விநியோகம் செய்வதற்காக 550 டன் யூரியா சூரத்தில் இருந்து சிவகங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் செய்து குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, சிவகங்கை மாவட்ட விவசாயிகள் தற்போது பெய்து வரும் மழையை பயன்படுத்தி 30 ஆயிரம் ஏக்டேருக்கு மேல் சாகுபடி பணிகளை செய்து வருகின்றார்கள். விவசாயிகளுக்கு தேவைப்படும் யூரியா, டிஏபி, பொட்டாஷ் மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்களை அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலமாக விற்பனை செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

விவசாயிகளுக்கு எவ்வித தடையும் இன்றி உரம் விநியோகம் செய்வது குறித்து ஏற்கனவே அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலாளர்களுக்கும் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. இதை விவசாயிகளுக்கு தாமதம் இன்றி பயிர் கடன்கள் மற்றும் உரங்கள் வழங்க அறிவுரை வழங்கப்பட்டிருக்கின்றது. அந்த வகையில் மாவட்டத்தில் இருக்கும் 48 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு பிரித்து அனுப்பப்பட்டிருக்கின்றது. விவசாயிகள் தங்களுக்கு தேவையான உரங்கள் வாங்கும் போது ஆதார் அட்டைகளை குறித்து விற்பனை நிலையத்தின் மூலமாக பில்களைப் பெற்று உரங்களை வாங்கிக் கொள்ளலாம் என கூறப்பட்டிருக்கின்றது.

Categories

Tech |