பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் பத்தாவது தவணையில் 4,000 ஆயிரம் ரூபாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது .பி
ரதமர் கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு தவணைக்கும் 2000 ரூபாய் என்ற கணக்கில் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக பணம் செலுத்தப்பட்டு வருகிறது. 2018ஆம் ஆண்டு முதல் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு இதுவரை 9 தவணைகளில் விவசாயிகளுக்கு பணம் செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் டிசம்பர் 25ஆம் தேதிக்குள் விவசாயிகளின் வங்கி கணக்கில் பத்தாவது தவணையாக 2000 ரூபாய் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது
கடந்த ஆண்டு டிசம்பர் 25ஆம் தேதிக்கு முன்பாக விவசாயிகளுக்கு பணம் செலுத்தப்பட்டது. அதேபோல் இந்த ஆண்டும் செலுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த ஆண்டு சில விவசாயிகளுக்கு மட்டும் 2,000 ரூபாய்க்கு பதிலாக நான்காயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று கூறப்படுகின்றது. குறிப்பிட்ட சில விவசாயிகளுக்கு மட்டும் பத்தாம் தவணையில் நான்காயிரம் ரூபாய் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அதாவது ஒன்பதாவது தவணை பணம் வராத விவசாயிகளுக்கு மொத்தமாக பத்தாவது தவணையில் நான்காயிரம் ரூபாய் கிடைக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.