Categories
மாநில செய்திகள்

விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்…. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு….!!!!

உரம் தொடர்பான தகவலை பெறவும் புகார் தெரிவிக்கவும் உரம் உதவி மையம் அமைத்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: “தமிழ்நாட்டில் 6.5 லட்சம் ஏக்கர் பரப்பில் சிறு தானியம், பயிறு வகைகள், எண்ணெய் வித்துக்கள், கரும்பு மற்றும் பருத்தி உற்பத்தி பயிர்கள் ஆகியவை சேர்த்து 46.2 இலட்சம் எக்டர் பரப்பளவில் பயிர் செய்யப்பட்டு வருகிறது. இதற்கு தேவையான உரங்கள், மாநிலத்தில் உள்ள 8,100 தனியார் விற்பனை நிலையங்கள் மற்றும் 4,354 கூட்டுறவு விற்பனை மையங்கள் வாயிலாக விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.

மாதந்தோறும் மாநில அரசுக்கு தேவையான மானிய உரங்களான யூரியா, டிஏபி, பொட்டாஷ் மற்றும் காம்பளக்ஸ் உரங்கள் ஒன்றிய அரசால் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது. சுமார் 15 உர நிறுவனங்கள் வாயிலாக தமிழகத்திற்கு வழங்கப்படுகின்றது. தமிழ்நாடு முதல்வர் அவர்களின் உத்தரவின்படி மாநில அளவில் உரம் தொடர்பான தகவல்களை பெறவும் புகார்களை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்வதற்காகவும் உர உதவி மையம், சென்னை, வேளாண்மை இயக்குநர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டு உள்ளது.

விவசாயிகள் தங்கள் புகார்களை வாட்ஸ் அப் செயலி மூலமாகவும் பதிவு செய்திடலாம். எனவே, வேளாண் பெருங்குடி மக்கள் உரம் தொடர்பான தகவல்கள் மற்றும் புகார்களை 93634 40360 என்ற அலைபேசி எண்ணைத் தொடர்பு கொண்டு வாய்மொழியாகவும் மற்றும் வாட்ஸ் அப் செயலி மூலமாகவும் தெரிவித்து பயன்பெற கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Categories

Tech |