Categories
மாநில செய்திகள்

விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்….குறுவை சாகுபடி… அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!!!

தமிழ்நாட்டில் விவசாய வேளாண் பெருங்குடி மக்கள் நடப்பாண்டில் குறுவை சாகுபடி மேற்கொண்டிட  தயாரான நிலையில் எதிர்பாராத விதமாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் நல்ல மழை பெய்ததால் காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடி வர கூடிய சூழ்நிலையில் மேட்டூர் அணை நீர் நிரம்பி வருவதால் முதல்வர் ஸ்டாலின் குறுவை  விவசாய பணிகளுக்காக மே 24 ஆம் தேதி வரை தண்ணீர் திறந்து விடப்படும் என அறிவிப்பு வெளியிட்டு இருக்கின்றார்.

அந்த அறிவிப்பை தொடர்ந்து வேளாண் பெருங்குடி மக்கள் அந்த வாய்ப்பை பயன்படுத்தி  விவசாயத்தில் நெல் மற்றும் பிற பயிர்களை பயிரிட ஆயத்தமாகி வருகிறார்கள். முதல்வர் ஸ்டாலின் சென்ற வருடம் ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையை திறந்து குறுவை சாகுபடி தொகுப்புத் திட்டம் அறிவித்துள்ளார். 46 வருடங்களுக்குப் பின் 4.9 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப் பெற்று வரலாற்று சாதனை அடைய பெற்றிருந்தது. அதனைப் போலவே இந்த வருடமும் முதல்வர் ஸ்டாலின் மே மாதம் 24ஆம் தேதி வரை மேட்டூர் அணை திறக்கப்படும் என அறிவித்து அதிகளவில் பயிர் சாகுபடி செய்திட வேளாண் பெருங்குடி மக்களை கேட்டுக் கொண்டிருக்கின்றார்.

மேலும் தமிழ்நாடு முதல்வர் அறிவுரைப்படி குறுவை சாகுபடிக்கான ஆயத்த நிலை தொடர்பாக துறை அலுவலர்களுக்கான சிறப்பு ஆய்வுக் கூட்டம் வேளாண்மை உழவர்  நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் தலைமையில் நேற்று காலை காணொளி வாயிலாக நடைபெற்றுள்ளது. வேளாண்மை உள்துறை அமைச்சர் ஆய்வு கூட்டம் தலைமை உரையில் வருமுன் காப்போம் என்னும் அடிப்படையில் ஜூன் 12-ஆம் தேதிக்கு முன் கூட்டியே மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் பாசனத்திற்காக திறந்து விடப்படுவதால் டெல்டா மாவட்டங்களில் நெல் நடவு பணி மேற்கொள்ள வசதியாக நல்  முளைப்பு திறன் உள்ள நெல் விதைகளை இருப்பு வைக்க வேண்டும் எனவும் விதை ஆய்வு பணிகளை துரிதப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் வேளாண் பொறியியல் துறை மூலமாக தூர்வாரப்படும் வாய்க்கால் பணிகளை துரிதப்படுத்தி கடைமடை வரை தண்ணீர் சென்று சேர்வதை உறுதிப்படுத்தவேண்டும் குறுவை சாகுபடிக்கு தேவையான வேளாண் இயந்திரங்கள் ஆன டிராக்டர், பவர்டில்லர், நிலை சமப்படுத்தும் கருவி மற்றும் நடவு இயந்திரங்கள் போன்றவற்றை விவசாயிகளின் பயன்பாட்டிற்கு தயார் நிலையில் வைத்திருந்து தட்டுப்பாடின்றி வாடகைக்கு அளிப்பதுடன் பிற மாவட்டங்களிலிருந்தும் வரவைத்து வழங்கிட வேண்டும் எனவும் வட்டார அலுவலர்கள் விவசாயிகளை சந்தித்து மனு அடிப்படையில் உரமிடுதல் ஊக்குவிக்க வேண்டும் எனவும் தெரிவித்திருக்கின்றார். மேலும் சுற்றியுள்ள கிராமங்களில் காய்கறி உற்பத்தி இலக்கு நிர்ணயம் செய்ய வேண்டும் எனவும் விவசாயிகள் மதிக்கப்படுகிறார்கள் என்ற உணர்வை ஏற்படுத்த வேண்டும் என அறிவுறுத்தியிருக்கிறார்.

மாண்புமிகு முதல்வரின் இந்த பொன்னான அறிவிப்பினை பயன்படுத்தி அனைத்து அலுவலர்களும் இணைந்து குறுவை பருவத்திற்கான விதைகள் மற்றும் உரங்கள் போன்ற பணிகள் செவ்வனே செய்து உணவு தானிய உற்பத்திக்கு பாடுபட வேண்டும் என கூறி நன்றி தெரிவித்து உரையை நிறைவு செய்து இருக்கின்றார். மேலும் இந்த கூட்டத்தில் வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலர் குறுவை சாகுபடி தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு நடவடிக்கைகளை ஆய்வு செய்து கீழ்க்கண்ட அறிவுரைகளை வழங்கி உள்ளார். நடப்பு குருவை பருவத்திற்கு  தேவையான குறுகிய கால நெல் ரகங்களான கோ51, எடிடீ45 ,எடிடீ43 போன்ற விதைகளை தேவையான அளவு வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் தனியார் கடைகளிலும் இருப்பு வைத்திருக்க வேண்டும்.

மேலும் வேளாண்மை துறையின் மூலமாக டெல்டா மாவட்டங்களில் 1609 மெட்ரிக் டன் விநியோகம் செய்திட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு இதுவரை 539 மெட்ரிக் டன் விற்பனை செய்து 1,111 மெட்ரிக் டன் இருப்பு வைக்கப்பட்டு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. தனியார் கடைகளின் மூலமாக 1955 மெட்ரிக் டன் வினியோகம் செய்யப்பட்டு 2564 மெட்ரிக் டன் விதைகள் இருப்பு வைக்கப்பட்டு இருக்கிறது.  அவற்றின் முளைப்பு திறனை விதை சான்றளிப்பு துறை மூலமாக தொடர்ந்து கண்காணிப்பு செய்ய வேண்டும் குறுவை பருவத்திற்கு தேவையான யூரியா போன்ற உரங்கள் மற்றும் தனியார் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களிலும் போதிய அளவு இருப்பு வைத்து அவற்றின் விற்பனையும் தொடர்ந்து கண்காணித்துக் கொள்ளவேண்டும்.

குறுவை பருவத்தில் நடைமுறைப்படுத்தப்பட இருக்கின்ற 66 ஆயிரம் ஏக்கர் மாற்று பயிர் சாகுபடியை ஊக்குவிக்கும் உரிய விவசாயிகளை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான விதைகள் மற்றும் இதர வேளாண் இடு பொருட்களை விநியோகம் செய்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் வேளாண்மை இயக்குனர் குறுவை பருவத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் முன்னேற்பாடு பணிகளை எடுத்துரைக்கின்றார். வேளாண்மை உழவர்  நலத்துறை அமைச்சர் அவர்கள் டெல்டா மாவட்ட வாரியாக குறுவை பருவத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் ஆயத்த பணிகளை கேட்டறிந்துள்ளார்.

Categories

Tech |