குறுகிய கால விவசாய கடனுக்கு ஆண்டுக்கு 1.5% வட்டி மானியம் வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
விவசாயிகளின் நலனுக்காக பி.எம் கிசான் உள்ளிட்ட பல திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. விவசாயம் செய்வதற்கு குறைந்த வட்டியில் கடன் வாங்குவது உள்ளிட்ட பல திட்டங்கள் உள்ளன. இந்நிலையில் குறைந்த வட்டியில் குறுகிய கால கடன் வழங்கும் சிறப்பு திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி 2022 முதல் 2025 ஆம் ஆண்டு வரை 34,856 கோடி கூடுதல் பட்ஜெட் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் மூன்று லட்சம் வரையில் விவசாயிகளுக்கு குறுகிய கால கடன் வழங்கும் அனைத்து வகையான நிதி நிறுவனங்களுக்கும் ஆண்டுக்கு 1.5 சதவீதம் வட்டி மானியம் வழங்க 202-23 முதல் 2024-25 வரை மூன்று லட்சம் குறுகிய கால கடன் உதவி அளிக்கும் பொது துறை மற்றும் தனியார் வங்கிகள் கூட்டுறவு மற்றும் கணினி மயமாக்கப்பட்ட தொடுக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளுக்கு வட்டி மானியம் வழங்கப்படும்.
குறுகிய கால வேளாண் கடன் என்பது கால்நடை பராமரிப்பு, பால்வளம், கோழி வளர்ப்பு மீன்வளம் உள்ளிட அனைத்து செயல்பாடுகளுக்கும் கிடைக்கும் என்பதனால் வேலை வாய்ப்பு உருவாக வழி வகுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உரிய காலத்தில் கடனை சரியாக திருப்பி செலுத்தும் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு நான்கு சதவீதத்தில் கடன் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.