2022-2023 ஆம் வருடத்துக்கான தமிழக பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் கல்வி நிலையங்கள் முதல் மக்கள் வரை பல்வேறு அறிவிப்புகள் வெளியாகியது. இதையடுத்து நடப்பு ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் இன்று(மார்ச் 19) தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து பல்வேறு அறிவிப்புகள் தற்போது வெளியிடப்பட்டு வருகின்றன.
●ரூபாய் 15 கோடி மதிப்பில் வேளாண் கருவிகள் தொகுப்புகள் வழங்கப்படும்.
● மயிலாடுதுறையில் ரூபாய் 75 லட்சத்தில் மண் பரிசோதனை கூடம் அமைக்கப்படும்.
● ஆதிதிராவிடர், பழங்குடியினர், சிறு, குறு விவசாயிகளுக்கு கூடுதலாக 20 சதவீத மானியம் தர 5 கோடி ஒதுக்கீடு.
● கரும்பு சாகுபடி ஊக்குவிப்புக்காக ரூபாய் 10 கோடி ஒதுக்கீடு.
● 38 கிராமங்களில் ரூபாய் 95 கோடியில் மதிப்பு கூட்டல் மற்றும் சந்தைப்படுத்துதல் மையங்கள் அமைக்கப்படும்.