பிரதமர் கிசான் பணத்திற்காக காத்திருக்கும் விவசாயிகள் சரி செய்ய வேண்டிய விஷயங்களைப் பற்றி இதில் நாம் தெரிந்துகொள்வோம்.
பிரதமர் கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் பணம் வழங்கப்பட்டு வருகின்றது. மொத்தம் மூன்று தவணையாக வழங்கப்படுகிறது. இதுவரை 9 தவணை பணம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. டிசம்பர் 25ஆம் தேதிக்குள் பத்தாம் தவணை பணமும் விவசாயிகளுக்கு செலுத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இதில் விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு நேரடியாக பணம் வந்துவிடும். இருப்பினும் சில விவசாயிகளுக்கு பணம் வந்து சேர்வதில்லை.
இதற்கு என்ன காரணமென்றால் விவசாயிகளின் வங்கி கணக்கு எண், ஆதார் எண் உள்ளிட்ட தகவல்களில் ஏதேனும் தவறு இருந்தால் பணம் வருவதில் சிக்கல் ஏற்படும். இதை எப்படி திருத்திக் கொள்வது என்பதை பற்றி இதில் தெரிந்து கொள்வோம்.
முதலில், பிரதமர் கிசான் இணையதளத்துக்கு செல்லவும்.
அதில் உள்ள Farmers corner பகுதியை தேர்வு செய்யவும்.
அதில் ‘Aadhaar edit’ பகுதிக்கு செல்லவும்.
இப்போது திறக்கும் பக்கத்தில் ஆதார் எண் உள்ளிட்ட விவரங்களை சரிபார்த்துக்கொள்ளலாம்.
இதில் உங்களது ஆதார் எண், வங்கிக் கணக்கு எண் உள்ளிட்ட விவரங்களை சரிபார்த்து தவறாக இருந்தால் திருத்திக்கொள்ளலாம்.