நாடு முழுவதும் pm-kisan திட்டத்தின் கீழ் மத்திய அரசு நிறைந்த விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஒவ்வொரு வருடமும் 6,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது. இது ஒரு தவணைக்கு 2000 ரூபாய் வீதம் மூன்று தவணைகளாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை விவசாயிகளுக்கு 11 தவணைகள் வழங்கப்பட்டுள்ளன.12-வது தவணை எப்போது வரும் என்று விவசாயிகள் அனைவரும் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் வருகின்ற நவம்பர் 30ஆம் தேதிக்குள் 12 வது தவணைப்பணம் வந்து சேரும் என அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதனிடையே பணம் எப்போது வரும் என்று பயனாளிகள் அனைவரும் காத்திருக்கின்றன. அவர்களின் விண்ணப்ப நிலை எப்படி உள்ளது என்றும் அடிக்கடி சரிபார்த்துக் கொண்டிருக்கின்றன. விவசாயிகள் எளிதில் பிஎம் கிசான் இணையதளம் மூலமாக விண்ணப்பநிலையை சரிபார்த்துக் கொள்ளலாம்.
அதன்படி பிஎம் கிசான் ஸ்டேட்டஸ் மற்றும் இதர் அப்டேட்டுகளுக்கு டோல் ஃப்ரீ நம்பரை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. பயனாளிகள் 155261 என்ற நம்பருக்கு தொடர்பு கொண்டு அனைத்து அப்டேட்டுகளையும் எளிதில் பெறலாம். அதுமட்டுமல்லாமல் கேஒய்சி சரிபார்ப்பை கட்டாயம் முடித்திருக்க வேண்டும். மேலும் ஆதார் மற்றும் மொபைல் நம்பர் சரிபார்ப்பு முறையும் அவசியம்.