Pm-kisan திட்டத்தின் கீழ் 10-வது தவணைப் பணம் வருமா? இல்லையா? என்பதை விவசாயிகள் இப்படி சரி பார்க்கலாம்.
மத்திய அரசின் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி என்று அழைக்கப்படும் விவசாயிகளின் நிதி உதவி திட்டத்தின் கீழ் இந்தியாவில் உள்ள நலிந்த விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் மூன்று தவணைகளாக 6 ஆயிரம் நிதியுதவி வழங்கப்பட்டு வருகின்றது. பயிரிடக்கூடிய நிலங்களை தங்களது பெயரில் வைத்திருக்கும் விவசாயிகள் இந்த நிதி உதவி பெற விண்ணப்பிக்க முடியும். கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
pm-kisan திட்டத்தின் கீழ் இதுவரை ஒன்பது தவணைகள் பணம் வழங்கப்பட்டுள்ளது. பத்தாவது தவணைப் பணம் ஜனவரி மாதம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் சிலர் தங்களுக்கு நிதி உதவி கிடைக்குமா என்று அச்சத்தில் உள்ளனர் . pm-kisan கணக்கில் பயனாளிகளின் விவரம் சரியாக இல்லாவிட்டால் நிதியுதவி வராமல் போவதற்கு வாய்ப்புள்ளது. எனவே நிதி உதவி பெறுவதற்கு தகுதி உள்ளதா? விண்ணப்ப கோரிக்கை நிராகரிக்கப்பட்டதா என்று தெரிந்துகொள்ள pmkisan.gov.in என்ற வெப்சைட்டில் சென்று பார்க்கலாம்.
அதிலுள்ள ‘Beneficiary Status’ என்ற ஆப்சனை கிளிக் செய்து உள்ளே சென்றால், ஆதார் நம்பர், மொபைல் நம்பர், அக்கவுண்ட் நம்பர் ஆகிய ஆப்சன்கள் இருக்கும். ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்து ‘Get Data’ என்பதை கிளிக் செய்யவும். இப்போது உங்களுடைய பத்தாவது தவணை பணத்தை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ளலாம். மொபைல் ஆப் மூலமாகவும் தெரிந்து கொள்ள முடியும்.