போராட்டம் நடத்தும் விவசாயிகளுடன் மத்திய அரசு உடனடியாக நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று டெல்லி முதலமைச்சர் திரு. அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தி உள்ளார்.
டெல்லி விவசாயிகள் போராட்டம் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் போராட்டம் நடத்தும் விவசாயிகளுடன் மத்திய அரசு உடனடியாக நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இதற்கிடையே நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ஆம் ஆத்மி மூத்த தலைவர் திரு. சௌரோத் பரத்வாஜ்
டெல்லியில் லட்சக்கணக்கான விவசாயிகள் பேச்சுவார்த்தைக்காக காத்துக் கொண்டிருக்கும் போது உள்துறை மந்திரி அமித்ஷா ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலுக்காக பிரச்சாரத்திற்கு சென்றிருப்பது மிகவும் பொறுப்பற்ற செயல் என்றார்.