Categories
அரசியல் மாநில செய்திகள்

“விவசாயிகளுடன் ஒரு நாள்” போயிட்டு வாங்க…. அமைச்சர்களுக்கு முதல்வர் போட்ட உத்தரவு…!!!

முதல்வர் மு.க ஸ்டாலின் மக்களுக்காக பல்வேறு நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இதனால் மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் இன்று சட்டப்பேரவையில் வேளாண் துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது. இதில்  கிராமங்கள்தோறும் விவசாயிகளிடம் சென்று அவர்களிடம் பழகி அவர்களுடைய பிரச்சினைகளை தெரிந்து கொண்டு அதற்கு தீர்வு காண வேண்டும் என்று அமைச்சர்களுக்கும், எம்எல்ஏக்களுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார் .

“விவசாயிகளுடன் ஒரு நாள்” என்ற இந்த புதிய திட்டத்தின் மூலமாக கிராமங்கள்தோறும் சென்று விவசாயிகளோடு இந்த சந்திப்பு நடைபெற வேண்டும் என்றும், அவர்களுடைய பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காணவேடனும் என்று வலியுறுத்தியுள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |