Categories
விவசாயம்

விவசாயிகளே!…. அதிக லாபம் தரும் பணப்பயிர்கள் என்னென்ன?…. இதோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க……!!!!!!

இந்தியாவில் அதிகமான லாபம் ஈட்டும் பணப்பயிர்கள் என்னென்ன?…

அரிசி 

கிட்டத்தட்ட நாடு முழுதும் விளைவிக்கப்படும் மிகவும் பிரபலமான பயிர் அரசி ஆகும். சீனாவுக்கு அடுத்து அரிசி உற்பத்தியில் இந்தியா 2-வது இடத்தில் இருக்கிறது. இது ஒரு காரீப் பயிர் ஆகும். பெரும்பாலும் தென்மாநிலங்களில் பல வகையான சுற்றுச்சூழல் நிலைமைகளின் கீழ் நெல் பயிரிடப்படுகிறது. பல்வேறு சாகுபடி முறைகள்  வாயிலாக அதிகமான மகசூல் பெறலாம்.

கோதுமை

கோதுமை இந்தியாவில் மிக இலாபகரமான பணப் பயிர்களில் ஒன்று ஆகும். இது ஒரு ரபிபயிர் மற்றும் வடக்கு, வடமேற்கு இந்தியாவில் மிக முக்கியமான உணவுப் பயிராக கருதப்படுகிறது. பிற தானிய வகை பயிர்களுடன் ஒப்பிடும்போது கோதுமை வளர்ப்பு மிகவும் எளிதானது ஆகும். கோதுமை பல்வேறு வகையான தட்பவெப்ப நிலைகளில் வளர்க்கப்படலாம். ஏனென்றால் இது அதிக தகவமைப்புத் தன்மையைக் கொண்டுள்ளது.

கடுகு

கடுகு வறண்ட மற்றும் குளிர்ந்த காலநிலை பருவங்களில் வளரும் தன்மை கொண்டது. இதை வளர்ப்பதற்கு 10 டிகிரி செல்சியஸ் முதல் 25 டிகிரி செல்சியஸ் வரையிலும் பொருத்தமான வெப்பநிலை வரம்பு ஆகும். கடுகு உலகின் 3-வது மிக முக்கியமான எண்ணெய் வித்து வகைகளில் ஒன்றாகும்.

 மக்காச்சோளம் 

இந்தியாவில் மிக முக்கியமான பயிர் மக்காசோளம். இதுகர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட இந்தியாவின் தென்பகுதிகளில் முக்கியமாக வளர்க்கப்படுகிறது. இது 21 டிகிரி செல்சியஸ் முதல் 27 டிகிரி செல்சியஸ் வரையிலும் வெப்பநிலை நிலவும் பகுதிகளில் அதிகமான விளைச்சல் தரும்.

தினை 

தினை வகை பயிர்களில் ஜோவர், பஜ்ரா ஆகிய பயிர்கள் அடங்கும். இவைகள் பெரும்பாலும் அதிகமான வெப்பநிலை மற்றும் வறண்டநிலங்களில் வளர்க்கப்படுகிறது. ஒரு களிமண் வகை மண்ணில் இவை அதிகமான விளைச்சலை தருகிறது.

பருத்தி

பருத்தி அதிக லாபகரமான பணப் பயிர்களில் முக்கியமான ஒன்றாக விளங்குகிறது. இது ஒரு காரீஃப் பயிர் ஆகும். மேலும் இது ஒரு நார்பயிரும் கூட மற்றும் காய்கறி எண்ணெய் தயாரிக்க பருத்தி விதைகள் பயன்படுத்தப்படுகிறது. பருத்தி விவசாயத்திற்கு 21 டிகிரி செல்சியஸ் முதல் 30 டிகிரி செல்சியஸ் வரையிலும் வெப்பநிலை பொருத்தமானதாக இருக்கும்.

இதைத்தவிர கரும்பு, மூங்கில், கற்றாழை, மசாலா, மருத்துவ தாவரங்கள், தேயிலை, பிற மூலிகைகள் உள்ளிட்ட வேறு சில லாபகரமான பணப்பயிர்களும் இருக்கின்றன.

Categories

Tech |