Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளே…! இதுவே கடைசி வாய்ப்பு…. உடனே வேலைய முடிங்க…. முக்கிய அறிவிப்பு…!!!!

மத்திய அரசின் முக்கிய திட்டங்களுள் ஒன்றாக பிரதமரின் கிசன் சம்மன் நிதி ஆகும். இந்தத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டு ஒன்றுக்கு 6,000 ரூபாய் கிடைக்கும். இந்த உதவித் தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். மேலும் இந்த பணம் ரூபாய் 2000 வீதம் மூன்று தவணைகளில் செலுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் பத்தாவது தவணையை பிரதமர் மோடி சமீபத்தில் தான் வெளியிட்டார். இந்த தொகையானது விவசாயிகளுடைய வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது.

இதில் இதுவரை 1.60 லட்சம் கோடிக்கும் மேலான விவசாயிகளுக்கு கணக்கில் செலுத்தப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் 11-வது தவணைக்கான பணம் இன்னும் சில நாட்களில் வர இருக்கிறது. இதற்காக பதிவு செய்த விவசாயிகள் அனைவரும் காத்து கிடக்கின்றனர். இந்தத் திட்டத்தின் கீழ் நிதியுதவி பெறுவதற்காக விவசாயிகள் தங்களுடைய KYC விவரங்களை சரிபார்த்து முடிக்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது.

அதற்கான கால அவகாசம் முடிய உள்ள சூழலில் அதற்கான அவகாசம் மேலும் நீட்டிக்கப் பட்டுள்ளது. அதன்படி மே 31-ஆம் தேதி வரையில் விவசாயிகள் இந்த வேலையை செய்து முடிக்கலாம். முன்னதாக மார்ச் 31 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. விவசாயிகள் நிதி உதவி திட்டத்தில் மோசடி நடைபெறக் கூடாது என்பதற்காகவும் சரியான பயனாளிகளுக்கு நிதியுதவி சென்று அடைய வேண்டும் என்பதற்காகவும் KYC  கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது சிலருக்கு சிரமமாக இருக்கலாம். ஆனால் இந்த திட்டத்தின் நோக்கம் சரியாக நடைபெற இதுபோன்ற விதிமுறைகள் கடைபிடிப்பது நல்லது.

Categories

Tech |