Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளே…! இந்த திட்டத்தில் உடனே பதிவு பண்ணுங்க…. மத்திய அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

அனைத்து விவசாயிகளும் பிரதான் மந்திரி கிசான் மன் தன்  யோஜனா  பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் பதிவு செய்யுமாறு மத்திய விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கேட்டுக்கொண்டுள்ளார். பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் பதிவு செய்த விவசாயிகளுக்கு பாலிசி அவர்கள் வீட்டிலேயே வழங்கப்படும் எனவும் காப்பீடு நிறுவனங்கள் விவசாயிகளுக்கு பாலீசி  ஆவணங்களை வீட்டிலேயே  வழங்கப்படுவதாக கூறிய அவர் பிரதமர் கிசான் திட்டம் மற்றும் பயிர் கடன் காப்பீடு திட்டத்தில் செலுத்தப்படும் பணம் நேரடியாக விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் மத்திய அரசின் திட்டங்களை இடைத்தரகர்கள் மற்றும் முதல்வர்களின் பிடியிலிருந்து விவசாயிகளே விடுவித்து  வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த பயிர் காப்பீடு திட்டத்தை பிப்ரவரி 18,2016 அன்று பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் கீழ்   பயிர்களுக்கு வளர்ச்சி, சூறாவளி, மழை, வெள்ளம், நிலச்சரிவு, ஆலங்கட்டி, மழை, பூச்சிகடி, சூறாவளி போன்ற ஆபத்துகளுக்கு  எதிராக காப்பீட்டுத்தொகை வழங்கப்படுகிறது. இயற்கை சீற்றங்கள் விவசாயிகள் பயிர் சேதம் அடைந்தால்  அவற்றுக்கு காப்பீடு பெறலாம். இதன் மூலமாக பயிர் காப்பீடு திட்டத்தில் சேருவது விதைப்பு முதல் அறுவடை வரை செய்ததிலிருந்து பாதுகாப்பை வழங்கி வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் கடந்த ஆறு ஆண்டுகளில் 36 கோடி விவசாயிகள் பயனடைந்துள்ளனர். மேலும் இத் திட்டத்தில் சேருவதற்கு ஆன்லைன் மூலமாக நாம்  விண்ணப்பிப்பதற்கு  https://pmfby.gov.in இந்த இணையதளத்திற்கு செல்ல வேண்டும். அது விவசாயிகளுக்கான போர்ட்டலை  அழுத்தவும். இல்லை என்றால் பொது சேவை மையங்களுக்கு சென்று விண்ணப்பிக்கலாம். இதற்கு தேவையான ஆவணங்களாக ஆதார் அட்டை, நகல் வங்கி கடவுச்சீட்டு முன்பக்கம், நில ஆவணங்கள்,  நகல் அரசால் அறிவிக்கப்பட்ட பின் ஆவணங்கள் போன்றவை தேவைப்படும்.

Categories

Tech |