Categories
மாநில செய்திகள்

 விவசாயிகளே… இனி கவலை வேண்டாம்… இன்று முதல் திறப்பு… அமைச்சர் உத்தரவு…!!!

விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு இன்று முதல் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படுவதற்கு அமைச்சர் காமராஜ் உத்தரவிட்டுள்ளார்.

டெல்டா மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருவதால், நெல் மணிகள் அனைத்தும் மழையில் நனைந்து முளைக்கத் தொடங்கியுள்ளன. அதனால் விவசாயிகள் அனைவரும் பெரும் கவலை அடைந்துள்ளனர். விவசாயிகளுக்கு உதவும் வகையில் நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டுமென உணவுத்துறை அமைச்சர் காமராஜ் உத்தரவிட்டார். அந்த உத்தரவின்பேரில் திருவாரூர் மாவட்டத்தில் இன்று முதல் 189 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு இருக்கின்றன. அங்கு சன்ன ரக நெல், ஒரு குவிண்டாலுக்கு ஊக்கத் தொகை 70 ரூபாயைச் சேர்த்து மொத்தம் 1,958 ரூபாய்க்கும், புது ரக நெல் ஊக்கத் தொகை 50 ரூபாய் சேர்த்து 1,918 ரூபாய்க்கும் கொள்முதல் செய்யப்படுகிறது.

இந்த நிலையில் விதைகளின் ஈரப்பதத்தை கணக்கீடு செய்யாமல் கொள்முதல் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் அனைவரும் கோரிக்கையை முன்வைத்துள்ளனர். நாளை ஞாயிற்றுக்கிழமை என்பதால் தமிழகம் முழுவதும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் கட்டாயம் செயல்படும் என்றும் அதில் தினந்தோறும் ஆயிரம் மூட்டைகள் வரை நெல் கொள்முதல் செய்யலாம் என்றும் அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார்.அதுமட்டுமன்றி விவசாயிகளின் தேவைகளுக்கு ஏற்றவாறு மற்ற இடங்களிலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க அனுமதி வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |