உத்திரபிரதேசத்தில் நடைபெறவிருக்கும் உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு பாஜகவினரும் காங்கிரஸ் கட்சியினரும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு ஏற்கனவே முதல் மற்றும் இரண்டாம் கட்ட தேர்தல் முடிவடைந்து விட்ட நிலையில் தற்போது மூன்றாம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு பாஜக மத்திய மந்திரி அமித்ஷா திபியாபூரில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது, “மார்ச் 18ஆம் தேதி ஹோலிப்பண்டிகை மார்ச் 10ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை. மார்ச் 10ஆம் தேதி பாஜக அரசு மீண்டும் ஆட்சிக்கு வரும் மார்ச் 11ம் தேதி உங்கள் வீட்டிற்கு இலவச சிலிண்டர் வரும்.
நாங்கள் ஆட்சிக்கு வந்த பின்னர் விவசாயிகள் யாரும் அடுத்த 5 ஆண்டுகளுக்கு மின் கட்டணம் செலுத்த வேண்டாம். சமாஜ்வாதி கட்சி அழிக்கப்பட்டுவிட்டது பாஜக 300க்கும் மேற்பட்ட இடங்களில் வென்று தரமான ஆட்சியை பிடிக்க உள்ளது. மூன்றாம் கட்ட வாக்குப் பதிவின்போது நீங்கள் இந்த பெரும்பான்மையை பாஜகவிற்கு பறைசாற்ற வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.