Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளே…. இனி ரேஷன் கார்டு இருந்தால் மட்டும் போதும்…. ஈஸியா பணம் கிடைக்கும்…. புதிய திட்டம்….!!!!

விவசாயிகளுக்கு 6000 ரூபாய் நிதி உதவி தரும் திட்டத்தில் புதிய விதிமுறைகள் தற்போது அமலுக்கு வந்துள்ளது. ஆதார் மட்டுமல்லாமல் இனி ரேஷன் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜன திட்டத்தில் முறைகேடுகள் நடைபெறுகின்றன. அதனை தடுக்க ரேஷன் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்தத் திட்டத்தில் ரேஷன் கார்டு எண்ணை பதிவிட பிறகுதான் 2000 ரூபாய் நிதியுதவி பெற முடியும்.

இந்தத் திட்டத்தில் புதிதாக பதிவு செய்யும்போது ரேஷன் கார்டு என்னையும் மற்றும் ஆவணங்களின் நகலையும் பதிவேற்றம் செய்வது கட்டாயம். எனவே இனிமேல் ரேஷன் கார்டு என் இல்லாமல் இந்தத் திட்டத்தில் பதிவு செய்ய முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது. ரேஷன் கார்டு தவிர நில ஆவணம், ஆதார் கார்டு, பேங்க் பாஸ்புக் மற்றும் டிப்லரேஷன் ஆகியவற்றின் ஹார்ட் காப்பியை இனி சமர்ப்பிக்க தேவையில்லை. அதற்கான நிபந்தனையும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதனால் விவசாயிகளின் நேரம் மிச்சமாகும். அதுமட்டுமல்லாமல் இந்த திட்டத்தின் பத்தாவது தவணைப் பணம் டிசம்பர் 15ஆம் தேதிக்குள் வங்கி கணக்கில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தவணையில் 2000 ரூபாய் பணம் கிடைக்கும். மேலும் pm-kisan திட்டத்தின் கீழ் நிதியுதவி பெறுவதற்கு அக்டோபர் 31-ம் தேதி வரை பதிவு செய்ய வாய்ப்பு உள்ளது.

Categories

Tech |