Categories
அரசியல்

விவசாயிகளே…! உங்களுக்கு பணம் வந்து சேரலையா…? உடனே இதை மட்டும் செய்யுங்க…!!!!!

இந்தியாவில் உள்ள விவசாயிகளுக்கு உதவும் அடிப்படையில் 2019ஆம் ஆண்டு பிஎம் கிசான் நிதியுதவி திட்டம் என்ற ஒரு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒருமுறை விவசாயிகளின் கணக்கிற்கு 2,000 வீதம் ஒரு ஆண்டில் மட்டுமே 6 ஆயிரம் வரை நிதியுதவி வழங்கப்படும். அந்த வகையில் பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதியின் 11-வது தவணை ஏப்ரல் 2022 ல் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே  இந்த பிஎம் கிசான் நிதியுதவி பெரும் விவசாயிகள் eKYC செயல்முறையை கட்டாயம் முடிக்க வேண்டும். இல்லையென்றால் 4 மாதத்திற்கு ஒருமுறை பெறப்படும் நிதியுதவியில் சிக்கல் ஏற்பட்டுவிடும். முன்பே eKYC செயல்முறையை முடிக்கும்படி மார்ச் 31 (இன்று) வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது. இப்போது அனைத்து PM-KISAN பயனாளிகளுக்கும் eKYC-ன் செயல்முறையை முடிக்ககோரி மே 22 ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நிறைய விவசாயிகளுக்கு பணம் வந்து சேரவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பயனாளிகள் தங்களுடைய பெயர், ஆதார், வங்கி கணக்கு ,செல்போன் நம்பர் போன்ற தகவலைதவறாக பதிவிட்டிருந்தால் சரியாக வந்து சேராது. மேலும் இந்த திட்டத்தில் பதிவு செய்த விவசாயிகளுக்கு நிதி உதவி வராவிட்டால் அவர்களின் பிரச்சனைக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விவசாயிகள் இதுகுறித்து அரசு சார்பாக அளிக்கப்பட்டுள்ள டோல் ஃப்ரீ நம்பர்களுக்கு புகார் கொடுக்கலாம். மேலும் தங்களுடைய கணக்கில் திருத்தம் இருந்தால் அதை உடனடியாக முடித்து விடுவது நல்லது.

பிஎம் கிசான் டோல் ஃபிரீ நம்பர்: 18001155266

பிஎம் கிசான் ஹெல்ப்லைன் நம்பர்: 155261

லேண்ட் லைன் நம்பர்கள்: 011-23381092, 23382401

பிஎம் கிசான் நியூ ஹெல்ப்லைன்: 011-24300606

மற்றொரு ஹெல்ப்லைன்: 0120-6025109

Categories

Tech |