இந்தியாவில் விவசாயிகளின் நலனுக்காக பிரதமர் நரேந்திர மோடி பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா என்ற திட்டத்தை தொடங்கியுள்ளார். இந்தத் திட்டத்தின்படி விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூபாய் 6,000 வழங்கப்படும். இந்த பணம் மொத்தமாக வழங்கப்படாமல் 3 தவணைகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு தவணைக்கும் 2,000 ரூபாய் வழங்கப்படும். இந்தத் திட்டத்தின்படி மொத்தம் 10 தவணைகள் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் 11-வது தவணை குறித்த அறிவிப்புக்காக விவசாயிகள் காத்திருந்தனர். இந்தத் திட்டத்தின்படி முதல் தவணை ஏப்ரல் 1-ம் தேதி முதல் ஜூலை 31-ஆம் தேதி வரை வழங்கப்படும். அதன் பிறகு 2-வது தவணை ஆகஸ்ட் 1 முதல் நவம்பர் 30 வரையிலும், 3-வது தவணை டிசம்பர் 1 முதல் மார்ச் 31 வரை யிலும் வழங்கப்படும். இந்நிலையில் கடந்த மாதம் 31-ஆம் தேதி 11-வது தவணை விவசாயிகளுக்கு விடுவிக்கப்பட்டது.
அதன்படி 21,000 கோடி ரூபாய் நிதி உதவியை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் அரசு அனுப்பியுள்ளது. இந்நிலையில் இந்தத் திட்டத்தில் இ-கேஒய் சி அப்டேட் செய்வதற்கான காலக்கெடுவை ஜூலை 31 வரை நீட்டித்து மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி e-KYC விவரங்களை அப்டேட் செய்யாதவர்கள் pmkissan.gov.in இணையதளத்தில் தேவையான ஆவணங்களை பதிவு செய்து ஜூலை 1க்குள் அப்டேட் செய்ய வேண்டும்.